திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் இருவர் பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் – நத்தம் சாலையில் வீட்டுக்கு வெளியே சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடோனுக்கு சரக்கு ஏற்றும் லாரி ஒன்றை ரிவர்ஸில் எடுத்துள்ளனர். அந்நேரம், வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பழனியம்மா, ஆரோக்கியசாமி உட்பட 5 பேர் மீது லாரி ஏறியது. இதில் பழனியம்மா, ஆரோக்கியசாமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரியை பின்புறமாக ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- திண்டுக்கல்: வீட்டின் வெளியே தூங்கியவர்கள் மீது லாரி மோதி இருவர் பலி
