தென்மாவட்டங்களில் இன்றும் கொட்டப் போகுது கனமழை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம்

வடகிழக்கு பருவமழை குறித்த முக்கிய அறிவிப்பு(தி தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் இருந்து)

தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் மழை இருக்கும்.

தென் மேற்கு வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கன்னியாகுமரி கடற்கரையை நோக்கி இன்று அல்லது நாளை நகர்ந்துவிடும். இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

நமக்கு அதிகமான மழை தேவைப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தென் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் இந்த மழையால் படிப்படியாக உயர்க்கூடும்.
=============
புயலாக மாறுமா?
அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இது எங்கே நகரும் என்பதை இப்போது கூற முடியாது. இந்த புயல் தெற்கு அந்தமானில் இருந்து வடமேற்காக கூட நகராகம். ஆதலால், அந்தபுயல் எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை அறிய சிறிது காத்திருக்க வேண்டும். பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.