சபரிமலை நடை டிச.,6 வரை அடைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரி ஒருவர் கூறியது:
பந்தள மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அம்பா தம்புராட்டி, 94 வயோதிகத்தால் நேற்று முன்தினம் காலமானார். இதனால் பந்தளத்தில் நடைபெறும் திருவாபரண தரிசனம் மட்டும் டிசம்பர் 6 வரை நிறுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை வழிபாடுகளிலோ, நடை திறப்பிலோ, தரிசன நேரங்களிலோ எந்த மாற்றமும் இல்லை, என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பந்தளம் அரண்மனை ராணி மரணம் அடைந்ததால் டிசம்பர் 6ம் தேதிவரை பக்தர்கள் திருவாபரண தரிசனம் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை மண்டல – மகரவிளக்கு காலத்தில் இந்த திருவாபரணங்களை பக்தர்கள் தரிசனத்திற்காக வைப்பார்கள்.
தினமும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து ஐயப்பனின் திருவாபரணத்தை தரிசித்து செல்வது வழக்கம். இந்நிலையில் பந்தளம் அரண்மனை ராணி அம்பா தம்புராட்டி (94) சனிக்கிழமை காாாமானார். இதனால் ஞாயிறு முதல் டிசம்பர் 6ம் தேதிவரை 11 நாட்கள் திருவாபரணங்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



