கனமழை: குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை மதுரை

கன மழை காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.