நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். வேதாரண்யத்தை அடுத்த வடமழை மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற முருகானந்தம்(31). இவர், வாடகை வாகன ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி கவிதா (31). இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சுரேஷ் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று திடீரென வீட்டில் இருந்த மனைவி கவிதாவின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியில் அந்தப் பெண், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவம்னை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதை அடுத்து, சுரேஷ் தலைமறைவானார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கரியாப்பட்டினம் போலீசார், புதன்கிழமை இன்று சுரேஷைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகம்: கத்தியால் மனைவியைக் குத்திக் கொன்ற கணவர் கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

