இரீடியம் விற்பனை மோசடி: ஜெயசித்ரா மகன் கைது!

Published:

ambrish - 2026

இரிடியம் விற்பனை செய்வதாக கூறி ₹26.20 கோடி மோசடி செய்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்பரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, சிவக்குமார் என பலருடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. இவர் புதுப்புது அர்த்தங்கள், மாமன் மகள் போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் கணேஷ். இவரது மகன் தான் பிரபல இசை அமைப்பாளர் அம்ரீஷ். ஜெயசித்ராவின் கணவர் சமீபத்தில் இறந்துவிட, அவர் தனது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

ambrish1 - 2026

இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான அம்ரீஷ் இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை ஜெயசித்ரா இயக்கிய நானே என்னுள் இல்லை படத்தில் நடித்த போது சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்ற தொழில் அதிபருக்கும் அம்ரீஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ambrish2 - 2026

நெடுமாறனிடம் , அம்ரீஷ் மற்றும் அவரது நண்பர்கள் ‘அரியவகை ‘இரிடியம்’ இருக்கிறது. இதற்கு கனடா ஆய்வகம் சான்று அளித்துள்ளது என்று கூறியுள்ளனர். இதை நம்பிய நெடுமாறனை மலேசியாவுக்கு அழைத்து சென்று மலேஷிய நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

அதன்படி மலேசிய நிறுவனம் பெருமளவு கொடுக்கும் தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு 26.20 கோடி கொடுத்தால் போதும் என அம்ரீஷ் கூறியுள்ளார். கோடிக்கணக்கில் பணம் வர போகிறது என எண்ணிய தொழிலதிபர் நெடுமாறன் அம்ரீஷ் மற்றும் இவரது நண்பர்களிடம், ரூ.26.20 கோடி கொடுத்துள்ளார்.

jeyachithra - 2026

ஆனால் மலேசிய நிறுவனத்திடமிருந்து எந்த பணமும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நெடுமாறன்.

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்ரீஷை கைது செய்தனர்; விசாரணையில் 26.20 கோடி ரூபாயை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img