December 6, 2025, 7:27 AM
23.8 C
Chennai

பிரபல நடிகர் மரணம்! திரையுலகம் இரங்கல்!

tks natarajan
tks natarajan

என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி” பாடலின் மூலம் புகழ்பெற்ற பாடகர் TKS நடராஜன். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடராஜன், தெம்மாங்கு பாடகராவார்.

நாடகத்துறையில் கொடிக்கட்டிப்பறந்த டிகேஎஸ் கலைக்குழுவில், சிறுவனாக இருந்த போது நடராஜன் சேர்ந்து நடித்தார். அதனால் அவர் டிகேஎஸ். நடராஜன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

சிறு வேடங்கள் என்றாலும் நடராஜன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1954 இல் வெளியான ரத்தபாசம் படத்தில் டிகேஎஸ் நடராஜன் திரைப்பட நடிகராக அறிமுகம் ஆனார். அதன்பின் நாடோடி, நீதிக்கு தலைவணங்கு, பொன்னகரம், தேன் கிண்ணம், கண்காட்சி, பகடை பனிரெண்டு, ராணி தேனீ, ஆடு புலி ஆட்டம், பட்டம் பறக்கட்டும், மங்களவாத்தியம், உதயகீதம், ஆனந்த கண்ணீர் , இதோ எந்தன் தெய்வம், காதல் பரிசு போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி” பாடலின் மூலம் மக்களுக்கு நெருக்கமான நடராஜன் அதன் பின்னர் பல கச்சேரிகளில் தன் குரலை பதிவு செய்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார் நடராஜன்.

அவரது இறுதிச்சடங்கு சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடராஜனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடராஜன் பாடிய என்னடி முனியம்மா பாடல், சமீபத்தில் ரீமேக் செய்யப்பட்டு, அதிலும் அவரே நடித்திருந்தார். அர்ஜூன் நடித்திருந்த அந்த பாடல் காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது.

இதே போல வருஷம் 16 திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் வந்திருந்தாலும், அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. கங்கைக் கரை மன்னனடி பாடல் தான் அதற்கு சரியான உதாரணம்.

நடிகர் கார்த்திக்கு பதிலாக குஷ்பு தரப்பிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட பாடகராக வரும் நடராஜனை மேடையில் ஏற விடாமல், கார்த்திக் தரப்பு செய்யும் கலாட்டா தான் அந்த படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று.

இன்றும் வருஷம் 16 படத்தை பார்ப்பவர்கள், அந்த காட்சியை விட்டு விலகிச் செல்ல முடியாது. பாடகர் என்றாலே இவர் என்கிற அளவில் அவரது கதாபாத்திரம் பொருந்தியிருக்கும்.

பெரும்பாலும் நலினம் கொண்ட கேலி கதாபாத்திரங்களின் தான் நடராஜன் நடித்திருப்பார். அவ்வளவு தத்ரூபமாக அது அவருக்கு பொருந்தியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் அது அவருடைய அடையாளமாகவும் மாறிவிட்டது.

80 களில் வலம் வந்த பல குணசித்திர நடிகர்களில் நடராஜனும் குறிப்பிடத்தக்கவர். சமீபமாக சினிமாத்துறையில் பெரிய அளவில் பங்களிப்பு இல்லாமல் ஒதுங்கியிருந்த நடராஜன்,

வயது மூப்பு காரணமாக திடீரென உயிரிழந்தது, சினிமா ரசிகர்களுக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. காலத்தால் அழியாத அவரது படைப்புகள் என்றும் வாழும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories