கொரோனா: நடிகர் பாண்டு காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

Published:

pandu1
pandu1

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கொரோனாவுக்கு பலியாகியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாண்டு கடந்த 1975ம் ஆண்டு ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் அவர் சிவாஜி ,கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் அவர் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.கேப்பிடல் லேட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த நடிகர் பாண்டுவுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

அதிமுக கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்து கொடுத்துள்ளார். அத்துடன் பல திரையுலக பிரபலங்களின் இல்லம், நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்தவர் பாண்டு.

இந்த நிலையில் நடிகர் பாண்டுவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வயது 74. மேலும் அவருடைய மனைவி குமுதா அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாண்டு மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img