ஒரே இரவில் 22 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்!

இந்தியா சற்றுமுன்
sonu sood
sonu sood

கொரோனா 2வது அலையின் தாக்குதலிலும் நடிகர் சோனுசூட் பொதுமக்களுக்கு உதவி செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் கடந்தாண்டு முதல் பொதுமக்கள் மத்தியில் ஹீரோவாக ஜொலிக்க தொடங்கினார். அதற்கு காரணம் கொரொனா ஊரடங்கில் அவர் செய்த ஏராளமான உதவிகள் தான்.

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது தொடங்கி, கல்வி, வேலைவாய்ப்பு என உதவி கேட்கும் அனைவருக்கும் இல்லை என சொல்லாமல் வள்ளலாக திகழ்ந்தார். இதற்கிடையில் கொரோனா 2வது அலையின் தாக்குதலிலும் நடிகர் சோனுசூட் அவர் தனது உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து ஆக்ஸிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிருக்கு போராடி வருவதாகவும், உதவி செய்யுமாறும் நடிகர் சோனுசூட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இரவு முழுவதும் போராடி அம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து 22 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் சோனுசூட். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் சோனு சூட் இது முற்றிலும் ஒரு கூட்டு முயற்சி.

நம் சக மனிதர்களும் உதவியுள்ளனர் என்றும், சிறிதளவு தாமதம் ஏற்பட்டிருந்தாலும் பல குடும்பத்தினர் தங்களின் அன்பானவர்களை இழந்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.