கங்கை அமரன் மனைவி காலமானார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினிமா சென்னை
manimegalai
manimegalai

கங்கை அமரனின் மனைவி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.

இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். இசைஞானி இளையராஜாவின் சகோதரரான இவர் சுமார் 20 படங்களுக்கு மேலாக இசையமைத்திருக்கிறார். இவரின் மகன் வெங்கட் பிரபு ஒரு இயக்குநரும்கூட.

இந்நிலையில் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு வயது 69 ஆகும்.

இவரின் உடல்நிலை மோசமடையவே அவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

venkat
venkat

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காத்தால் மரணமடைந்தார். அன்னையர் தினத்தன்று அவரின் மரணச் செய்தி வெளியாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.