chain snatching
chain snatching

பெண் காவலரிடம் 10 பவுன் தங்க தாலிச்சங்கலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் காஜாமலை மெயின் ரோட்டில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இவர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பெண் காவலரான ராஜாமணி தனது தாயார் சுசிலாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை சந்திக்க திருச்சி அருகிலுள்ள நவல்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து இரவு நேரத்தில் ராஜாமணியின் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென தாழ்ப்பாளை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து விட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த ராஜாமணியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ராஜாமணி புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பெண் காவலரிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending