அஜித் வீட்டில் வெடிகுண்டு சோதனை! விஷமிகளின் வேலை!

Published:

ajith
ajith

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அது புரளி என்பது தெரியவந்தது.

திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது சமீப காலமாக வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில் நடிகர்கள் அஜித், விஜய், தனுஷ், சரத்குமார், விஜயகாந்த் , ரஜினிகாந்த் என பல பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்து வருகிறது.

இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர் ஒருவர், அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.

இதையடுத்து போலீசார் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு விரைந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து மோப்ப நாய் உதவியுடன் ஒரு மணி நேரம் செய்தனர்.பின்னர் தான் இது புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டும் இதேபோல் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அது வதந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட கடுப்பில் உள்ளனர். இதுபோன்ற விஷமிகளை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img