தன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு! புகாரளித்த நடிகர் சார்லி!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை
charle
charle

காமெடி மற்றும் குணசித்திர நடிகரான சார்லியின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக. அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சமீபகாலமாக நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து அவர் புகாரில் கூறியதாவது, “எனக்கு டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராமில் கணக்கு இல்லை.

charli
charli

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களோடு நேரடியாக தொர்பு உள்ளதால் சமூக வலைத்தளங்கள் பக்கம் நான் வரவில்லை. ஆனால் எனது பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது.ர்கள்

என் மீது அபிமானம் கொண்டவர்கள் அந்த கணக்கை பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் சிலருக்கு பணம் கிடைக்கும் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால் என் பெயரில் தவறான கருத்துக்கள் வெளி வந்தால் அது எனது இமேஜை பெரிதும் பாதிக்கும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என்பதால் அதனை தடுக்க கோரி போலீசில் புகார் அளித்திருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.