கஞ்சா விற்ற காதலர்கள்! போலிஸிடம் சிக்கிய சிட்டுக்கள்!

Published:

Suriya vinothini
Suriya vinothini

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், போலீசார் பல்வேறு இடங்களில் தற்போது தீவிரமாக கண்கணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த நேரு நகர் வீரியம் பாளையம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர், இளம்பெண்ணுடன் சென்றுள்ளார். அவர்களை பார்த்த போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை மறித்து, அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் காந்தி மாநகரை சேர்ந்தவர் சூர்யா என்கிற சூரிய பிரகாஷ். இவரும், கோவையில் நர்சிங் படித்துவரும் விருதுநகரைச் சேர்ந்த வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

வினோதினி அவரது படிப்பு முடிந்தும் விருதுநகருக்கு செல்லாமல் காதலருடன் சுற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் காந்தி மாநகர் பகுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து வசித்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்கள் இருவரும் கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img