பிரபல நடிகையும், ஹம்சவர்த்தனின் மனைவியுமான ரேஷ்மா உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை தமிழகம்
reshma - 2026

பிரபல நடிகையும், பிரபல நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 42.

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் ரேஷ்மா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

reshma 1 - 2026

கார்த்திக் உடன் கிழக்கு முகம், மு.களஞ்சியம் இயக்கிய பூமணிபடத்தில் இரண்டாவது நாயகியாகவும் நடித்திருக்கிறார் இவர்.

இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நெகட்டிவ் ஆனது.
ஆனால் கொரோனா நெகட்டிவ் ஆன பிறகும் அவருக்கு மூச்சுத்திணறல் இருந்தது.

reshma 2 - 2026

அதனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சாந்தியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2:30மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் நடிகை ரேஷ்மாவின்(சாந்தி) உடல் தகனம் செய்யப்பட உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.