கோயில் நிலத்தில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க யாருக்கும் உரிமை இல்லை: உயர்நீதிமன்றம்!

Published:

court
court

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அந்த ஊராட்சி தலைவர் கட்டணம் வசூலித்து வருவதாக, ராமு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சேஷபுரீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், கோயில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஊராட்சி தலைவர் கட்டணம் வசூல் செய்வதற்கு எந்த அனுமதியும் இல்லை.

கோயில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூல் செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

மேலும், இதுவரை கட்டணமாக பெறப்பட்ட தொகை பற்றிய கணக்குகளை ஊராட்சி மன்றத் தலைவர் தாக்கல் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி பெறப்பட்ட பணத்தை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img