உஷார்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் சற்றுமுன் தொழில்நுட்பம்
hacker
hacker

கடந்த ஆண்டு லாக்டவுன் போடப்பட்டதன் விளைவாக டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பேமெண்ட்கள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அதிகரிப்புடன், இணைய மோசடிகளும் சேர்ந்தே அதிகரித்துள்ளன.

மோசடி என்றால் யாராவது உங்களை நேரில் ஏமாற்றும் நாட்கள் முடிந்துவிட்டன, இப்போது எல்லாம் ஆன்லைனில் உள்ளது, மேலும் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்பது கூட உங்களுக்குத் தெரியாது.

ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் தங்கள் வங்கி கணக்கு அல்லது பேமெண்ட்களை இயக்கும் ஒவ்வொரு நபரும் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன.

மேலும் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யக்கூடாது, உங்கள் ஒன்-டைம் கடவுச்சொல்லை (OTP) ஒருபோதும் வெளியிடக்கூடாது என்று வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் புதிய ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.. மோசடி கும்பல் பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்-ல் ” உங்களின் வருமான வரி பணம் ரீ ஃபண்ட் ஆகியுள்ளது.. ரூ. 15,490 உங்கள் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகிவிடும்.. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை சரிபார்த்து கொள்ளுங்கள்.. உங்களின் வங்கிக் கணக்கு எண் தவறாக இருந்தால் உங்கள் வங்கி தகவல்களை அப்டேட் செய்யுங்கள்.. இந்த லிங்கை கிளிக் செய்தால் அப்டேட் செய்யலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Cyber crime - 2026

ஆனால் இது புதியவகை வங்கி மோசடி என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.. இதுபோன்ற மெசேஜ் வந்தால் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள லிங்கை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.