சகோதரியின் பிறந்தநாள் என அழைத்து இளம்பெண்ணிற்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை
vankodumai - 2026

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரப்படியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த முத்து செல்வன் என்பவரை காதலித்து வந்துள்ளார். முத்து செல்வன் தனது சகோதரியின் பிறந்த நாள் விழாவிற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார். அப்போது உணவில் மயக்க மருத்து கொடுத்துள்ளார். இதனால் நினைவிழந்த அந்த பெண்ணை கற்பழித்துள்ளார். மயக்கம் தெளித்து எழுந்த அவர் கதறி அழுதுள்ளார்.

ஆனால் முத்து செல்வன் அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி கூறியுள்ளார். இதானல் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அந்த இளம் பெண் முத்து செல்வத்திடம் 3 பவுன் தங்க சங்கிலியையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், முத்து செல்வத்திற்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்துள்ளது இதனை தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் மறுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

இதனை விசாரித்த காவல்துறையினர் முத்து செல்வதையும் அவரது தந்தையையும் கைது செய்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.