
செங்கோட்டை: கடன் தொல்லை கழுத்தை நெரித்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் விபரீதமான முடிவைத் தேடிக் கொண்டுள்ளார் தேமுதிக பிரமுகர்.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மகன் ராமச்சந்திரன் (43). தேமுதிக பிரமுகரான இவர் கடையநல்லுாரில் சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் இனிப்புக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் வீட்டின் மாடிக்குச் சென்று அங்கு துாக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
நேற்று இரவு ராமச்சந்திரன் உடலைப் பார்த்த அவரது குடும்பத்தினர் இது குறித்து புகார் அளித்ததின் பேரில் புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



