திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், இவரது மகள் பச்சையம்மாள் வயது 2. 10.6.13 அன்று மாயமானார். பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் 19.6.13 ஆற்பாக்கம் கிராமத்தில் விவசாய கிணற்றில் சிறுமி பிணமாக மிதந்தார்.விசாரணையில் மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், இவருக்கும் பரமசிவம் இடையில் பண தகராறு இருந்ததால் சிறுமியை கடத்தி கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. வழக்கு விசாரணை நடந்தது. மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி, தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். ஐகோர்ட் விசாரணைக்கு பிறகு தண்டனை உறுதி செய்யப்படும் என்று நீதிபதி கூறினார்.
Popular Categories



