ஒருதலைக் காதலில் 9ஆம் வகுப்பு சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது

மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒருதலைக் காதலில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ரா. 14 வயதாகும் இவர் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல சித்ரா ஷேர் ஆட்டோவுக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

தீயில் கருகிய சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் ஒருதலைக் காதலால் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலீஸாருக்கு தெரியவந்தது. இதை அடுத்து, மாணவியின் ஊரான நடுவக்கோட்டையைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் (வயது 26) தான் சித்ரா மீது தீ வைத்தார் என்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக மாணவியின் மீது ஒருதலைக் காதலை வளர்த்து வந்துள்ளார், தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த பாலமுருகன். இவர் சித்ராவிடம் காதலைச் சொன்னபோது மறுத்த அவர், தன் பெற்றோரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார். அவர்கள் பாலமுருகனை கண்டித்தும், அவர் தன் போக்கில் மாறவில்லை.

சித்ராவைப் பின்தொடர்ந்து தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி, கொலை மிரட்டல், தற்கொலை மிரட்டல் என பல வழிகளைக் கையாண்டுள்ளார் ஆனால், சித்ரா இது குறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி பாலமுருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இந்நிலையில் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த பாலமுருகன், தனது கைதுக்கு பழிவாங்க, சித்ரா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய பாலமுருகனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், புதுப்பட்டி ஆயிரம் கண்ணுடையார் கோவில் அச்சம்பட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாலமுருகன் இன்று காலை போலீஸில் சிக்கிக் கொண்டார்.

கடந்த 2014லும் இதே போன்று, ஒருதலைக் காதல் விவகாரத்தில் திருமங்கலம் அருகே சின்னபூலாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி மீது ஆசிட் வீசப்பட்டது. திருமங்கலம் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories