பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

அருப்புக்கோட்டை அருகே வசிக்கும் 40 வயது உள்ள பெண் ஒருவர் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக காரில் வந்த அந்த பெண்ணின் நண்பர் கரிசல்குளத்தை சேர்ந்த முத்துச்செல்வம்
ஊரில் இறக்கி விடுவதாக கூறி காரில் ஏற்றிச் சென்றுள்ளார் இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கோபாலபுரம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது இவர்களை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் முத்துச்செல்வத்தை தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்து அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி ஓடியது சாலையோரம் காயமடைந்து அந்த முத்து செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
அங்கு முத்துசெல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய போலீசார் உடனடியாக விரைந்து செயல்பட்டு ராமானுஜபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது அவ்வழியாக முத்துச்செல்வம் கூறிய அடையாளங்களுடன் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை மடக்கி பிடித்து விசாரித்தில் அவர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் என தெரியவந்தது இதனையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயராஜ் ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன்(42) மற்றும் பேரையூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த
ஜெயக்குமார் (23) ராம்குமார் (20)
அழகுராஜ்(19) மற்றும் அல்லம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது இதில் சீனிவாசன் என்பவர் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிபிடத்தக்கது
மேலும் விசாரணையில் கோவிலாங்குளத்தை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது கூட்டாளிகளான வெங்கடாசலபுரத்தை சேர்ந்த பிரபாகரன் பிரபாகரன் தம்பி விஜய் ஆகிய 3 பேர் ஒரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர் இவர்களுடன் மற்ற நால்வரும் வந்துள்ளனர் அப்போது சாலையில் முத்துச்செல்வமும் அந்தப் பெண்ணும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சுற்றுவட்டார பகுதியில் யாரும் இருக்கின்றனரா என நோட்டமிட்டு இந்த குற்றச் செயலை அரங்கேற்றி உள்ளனர் என்பது தெரியவந்தது இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன் ஜெயக்குமார் ராம்குமார் அழகுராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் சிறுவனை சிறார் காப்பகத்தில்
சேர்த்தனர் மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபாகரன் மற்றும் அவரது தம்பி விஜய்யை தீவிரமாக தேடி வருகின்றனர் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அருப்புக்கோட்டை மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories