கலாம் பெயரை வைத்து கமல் தேடும் அரசியல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் மதுரை

கலாம் படித்த பள்ளிக்கு கமல் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்து முன்னணி நடத்தவிருந்த  போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

கலாம் பயின்ற பள்ளிக்கு கமல் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்து முன்னணி நடத்த இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு கமல் வருவதை எதிர்த்து இந்து முன்னணி போராட்டம் நடத்த இருந்தது. பள்ளியில் நிகழ்ச்சி நடத்தினால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் எனக்கூறி போராட்டம் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்குள் வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட நடிகர் கமலுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது.

அனுமதி மறுக்கப்பட்டதால் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்லும் கமலின் திட்டம் ரத்தனது. அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு இன்று காலை செல்ல திட்டமிட்டிருந்தார் கமல்.

ஆனால் அரசியல் நோக்கம் இருப்பதால் கலாம் பள்ளிக்கு செல்ல கமலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று  மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அப்துல் கலாம் பயின்ற பள்ளி நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

ஆசிரியர்கள் மாணவர்களை தவிர வேறு யாருக்கும் பள்ளிக்குள் அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். ஆசிரியர்கள், மாணவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்க கூடாது என்று உத்தரவு வந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் கலாம் பயின்ற பள்ளிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதால் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்தார் கமல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.