கலாம் வீட்டில் காலை உணவு; கமல் தொடங்கிய அரசியல்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

கலாமின் வீட்டில் கமல்ஹாசன் காலை உணவு உண்டு அரசியல் பாதையை நோக்கி நகர்ந்து செல்கிறார் கமல். அவருக்கு நினைவுப்பரிசு தந்தார் கலாமின் பேரன்.

அப்துல்கலாம் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை கமலிடம் அளித்தார் கலாமின் பேரன் சலீம். இதனையடுத்து அப்துல்கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிடுகிறார் நடிகர் கமல்ஹாசன்.

முன்னதாக ராமேஸ்வரத்தில் உள்ள ஓட்டலில் இருந்து அப்துல் கலாம் இல்லத்துக்கு புறப்பட்டார் கமல்ஹாசன்.

இதனிடையே ஊழலை எதிர்த்து கமல் குரல் கொடுத்தால் மக்கள் நம்பமாட்டார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

நடிகர் கமல் ஊழலை எதிர்த்து குரல் கொடுத்தால் எந்த மக்களும் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.