December 6, 2025, 3:09 AM
24.9 C
Chennai

சென்னை மாநகர போக்குவரத்து பிரச்சனைகள் – விரிவாக்கம்

சென்னை மாநகரின் நெருக்கடி குறித்து மெட்ராஸ் மியூசிங்ஸ் (Madras Musings) சில செய்திகளை படிக்க நேர்ந்தது. சென்னை மாநகரில் 1992இல் 6 லட்சம் வாகனங்கள் இருந்தன. 2001இல் 13 லட்சம் வாகனங்களாகப் பெருகின. இந்த கணக்கு 2012ன்படி சென்னையில் இன்றைக்கு 36 லட்சம் வாகனங்கள் இருந்தன. தற்போது ஒரு கோடியை எட்டிவிடும் அளவுக்கு சூழல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரம் மாசுபடுவதும், வாகன ஒலிப்பான்களுடைய சத்தங்கள் பொறுக்க முடியாமலிருக்கும் நிலையில் உள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அபாயகரமாக அமையும்.
தினமும் 1500 புது வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன. நூறாண்டுகளுக்கு முன் இருந்த சென்னையின் சாலைகள் அதே அளவில் தான் இன்றும் உள்ளன. ஆனால் சாலை விரிவாக்கம் என்று பெரியளவில் செய்யப்படவில்லை. வாகனங்கள் மட்டும் பெருக்கப்படுகின்றன. யார் கேட்டாலும் எளிதாக வாகனத்தை வாங்கிவிடலாம். ஒரு வீட்டிற்கு 4 அல்லது 5 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கிவிட்டு தெருவில் நிறுத்த வேண்டிய நிலைமை. வெளிநாடுகளில் வாகனங்கள் வாங்குவதில் நகரத்தின் சுற்றுச்சூழல் நன்மையை கருதி சில கட்டுப்பாடுகள் உண்டு. சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களில் வாகன ஒலிப்பான்கள் மூலம் சத்தங்களை எழுப்ப முடியாது. எழுப்பினால் அது குற்றமாகும். ஆனால் விலையுயர்ந்த வாகன ஒலிப்பான்களை வைத்துக்கொண்டு ஒலித்தால் தான் அந்த வாகனத்திற்கும், அதன் உரிமையாளருக்கும் மரியாதை என்ற போலித்தனமான உணர்வுகள். பெரிய வாகனங்கள் இருந்தால் தான் கௌரவம் என்ற மடத்தனமான எண்ணங்கள் இதற்காகவே கோடிக்கணக்கில் கடன் வாங்கி வாகனங்களை வாங்கும் பாசாங்குத்தனமான போக்குகள் போன்ற பொய்யான நிலைப்பாடுகள் நம்மிடையே உள்ளன. அரசாங்கமும் இதை கட்டுப்படுத்தாமல் புதுப் புது விதமாக ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வாடகை ஊர்திகள் என தேவையில்லாத போக்குவரத்து உரிமங்களை தாராளமாக அள்ளி வழங்கி தேவையற்ற போக்குவரத்து நெரிசல்களை அரசே உருவாக்கி சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு பக்கம் மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்னை, வேலையிழப்புகள், வெறும் கடன் அட்டைகளை தேய்த்தாலே வாகனங்கள் வழங்கப்படுகிறது. அதனுடைய கடன்களை கட்ட முடியாமல் தினமும் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள். இப்படியான போக்கு சென்னை நகரில் மட்டுமல்லாமல் சமூகத்தில் எல்லா நகரங்களிலும் புரையோடிப் போய்விட்டன. இதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசரமும், அவசியமும் உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
#சென்னை_மாநகர_விரிவாக்கம்
#சென்னை_போக்குவரத்து_நெரிசல்
#சென்னை_வாகன_பெருக்கம்
#Congestion_on_Chennai_city
#Madras_musings
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-02-2018
Madras musings article….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories