December 5, 2025, 9:39 PM
26.6 C
Chennai

1590 தமிழரைக் கொன்று எலும்புகளை விற்ற கேரள பாதிரியைக் கண்டிக்காத வைகோ மன்னிப்பு கேட்க ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

சென்னை:

கேரளத்து பாதிரி 1590 தமிழர்களைக் கொன்று எலும்புகளை விற்றதைக் கண்டிக்காத வைகோ தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவு:

paleshwaram annammal karunai illam - 2025

முன்னதாக, காஞ்சி பாலேஸ்வரத்தில் பிணக்குவியல் குறித்து தட்டிக் கேட்ட 3 மதிமுக.,வினர் மீது பொய் வழக்கு போட்டுள்ள காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்து வைகோ நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். ஆனால், தொடர்புடைய கேரள பாதிரியார் மீது கடும் கண்டனங்களை அவர் தெரிவிக்கவில்லை. இது தொடர்பில் நேற்று வைகோ வெளியிட்ட  அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர். அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது.

சேவை மனப்பான்மையுடன் துவங்கிய இந்த மையம், இப்போது வணிக நோக்கத்தில் செயல்படுகின்றது என்ற புகார்களின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையின் பேரில் சமூகநலம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று கள ஆய்வு செய்தனர். மருத்துவ ஆவணங்கள், முறையான சான்றிதழ்கள் இல்லாமல், இறந்த உடல்களை அடக்கம் செய்யாமல், பாதாள பிண அறையில் போட்டு வைத்து இருப்பதைப் பார்த்து எச்சரித்துள்ளனர்.

2017 செப்டம்பருக்குப் பின்னால் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வருவதை, அப்பகுதி சமூகச் செயல்பாட்டாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவித்து வந்தனர்.

கடந்த 20.02.2018 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு வந்துகொண்டு இருந்த, தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான போலி ஆம்புலென்ஸ் வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி, ‘அய்யய்யோ என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கத்திக்கொண்டே சென்றதைப் பார்த்து, அந்த வழியாக இருசக்கர மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் பிரபு துணிச்சலாகச் செயல்பட்டு வாகனத்தை இடைமறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார்.

இதைக் கவனித்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தின் உள்ளே இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயற்சித்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். அங்கே, சுயநினைவில்லாத திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும், அவருக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டு, காய்கறி, அரிசி மூட்டைகள் எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கூறிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் குரல் கொடுத்தனர்.

ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது அதிகபட்சமாக வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். பிரச்சினையைத் திசைதிருப்ப, வழக்கமாகப் பின்பற்றும் வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலென்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரைக் காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர்.

இதை அறிந்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக அவைத் தலைவரும், சிறந்த சமூக செயல்பாட்டாளருமான ஜி.கருணாகரன், சாலவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளருமான தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரினர்.

ஆனால் காவல்துறை அதிகாரி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமதித்ததோடு, அவர்களது அலைபேசிகளைப் பறித்துள்ளார்; யாருக்கும் தகவல் தெரிவிக்க விடாமல், நடுநிசி வேளையில் மூவரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று மனிதாபிமானமற்ற முறையில், இந்தியத் தண்டனைச் சட்டம் 147, 148, 341, 294(பி), 506(1), டி.பி.பி.3(1), ஆகிய பிரிவுகளில் பொய் வழக்குப் போட்டு, 21.02.2018 அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தவர்கள் மீது வழக்குப் போட்டுச் சிறையில் அடைத்து இருப்பது உரிமை மீறல் ஆகும்.

பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்மப் பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் 1590 உடல்கள் இங்கே உள்ள பாதாள பிண அறையில் போடப்பட்டு உள்ளதாக சம்பந்தப்பட்ட நிர்வாகி தாமஸ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இறந்தவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மரணத்திற்குப் பின்னர் அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்ககம் செய்யப்படாமல், பாதாள அறையில் பிணக்குவியல்களை வைத்து மூடுவதால், காற்று மாசு அடைந்து சுற்றுச் சூழல் பாதித்து நோய்கள் உருவாகக் காரணமாகி, சுகாதாரச் சீர்கேடு உருவாகின்றது. இறந்தவர்களின் உடல் உறுப்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

என்று வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

இதே போல், மதிமுக.,வினர் இந்த விவகாரத்தில் கைது செய்யப் பட்டதற்கு, தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார் ஹெச்.ராஜா. இது குறித்து அவர் பதிவு செய்த டிவிட்டர் பதிவு:

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories