spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்1590 ‘தமிழர்’ பொணங்கள காட்டாம.... ஐஐடி.,ல வாழ்த்துப்பா பாடலைன்னு ஆரமிச்சிட்டீங்களே! ஒருவேளை ‘அது’ உண்மையோ?

1590 ‘தமிழர்’ பொணங்கள காட்டாம…. ஐஐடி.,ல வாழ்த்துப்பா பாடலைன்னு ஆரமிச்சிட்டீங்களே! ஒருவேளை ‘அது’ உண்மையோ?

- Advertisement -

சென்னை:

தமிழகத்தில் இப்போது பரவலாக பேசப்படும் பகீர் செய்தி, காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் செயல்பட்டு வரும் செயிண்ட் ஜோசப் ஹோஸ்பிசஸ் என்ற கருணை இல்லம் குறித்ததுதான். இந்த இல்லத்தில் முதியவர்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாகக் கூறி, மர்மமான முறையில் அவர்கள் உயிரிழப்பதும், அவர்களின் இறப்புகள் குறித்த முறையான பதிவேடுகள், ஆவணங்கள் பராமரிக்கப் படாமல், சவக்குழியைப் போல் கான்கிரீட் கட்டடத்தில் உடல்களைப் போட்டு, அவற்றின் எலும்புகளை மட்டும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதுமான குற்றச்சாட்டுகள் இப்போது பொதுமக்களால் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

ஆனால், முக்கியமான ஒரு சமூகப் பிரச்னையை குறித்து பேசாமல், அதனை சாய்ஸில் விட்டு விட்டு, ஊடங்கள் தங்கள் விவாதங்களிலும் செய்திகளிலும், ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லி திசை திருப்புகின்றன. இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருப்பவர், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

 

ஆனால், ஐ.ஐ.டியில், பதிவு செய்யப்பட்ட பாடல்கள் போடவில்லை என்றும், வாயினால் பாடியதாகவும், இது மத்திய அரசு சார் நிகழ்ச்சி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால், இறை வணக்கப் பாடலுடன் தொடங்கப்பட்டது என்றும் கூறி விளக்கம் அளித்துள்ளார் ஐஐடி இயக்குனர்.

இருப்பினும், வைகோ., துவங்கி, பாமக., ராமதாஸ் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அனைவரும் வாழ்த்துப் பாடலில் காட்டும் அக்கறையை, கொடூரமான முறையில் மரணித்துப் போன அந்த 1590 தமிழர்களின் விவகாரத்தில் காட்டவில்லையே என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கோபத்துடன் கருத்துப் பகிர்வு செய்து வருகின்றனர்.

சாலவாக்கம் விவகாரம் தொடர்பாக, இன்று தனது கருத்தை வெளியிட்டிருந்த தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் சார்பில் சு.ஆ.பொன்னுசாமி, இது குறித்து அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஊடகங்கள் இந்த விவகாரத்தில் உறுதியுடன் தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுகுறித்து, “பிணந்திண்ணிக் கழுகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகில் உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கடந்த வாரம் தாம்பரத்தில் இருந்து காய்கறிகளோடு முதியவர்கள் இருவரும் அவர்களோடு முதியவர் ஒருவரின் சடலமும் கடத்தப்பட்ட தகவலை தொடர்ந்து அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இதுவரை உடலுறுப்புகளுக்காக இதுவரை சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற புகார் எழுந்து அதனடிப்படையில் அங்கே அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

மனிதநேயத்தோடு செயல்பட வேண்டிய ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகிகள் மனித உடல் உறுப்புகளுக்காக பிணந்திண்ணி கழுகுகளாக செயல்பட்டிருப்பதாக கிடைத்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இந்த ஆதரவற்றோர் இல்லம் குறித்து கடந்த 2015ம் ஆண்டே புகார் எழுந்த சூழ்நிலையில் ஊடகங்களில் அப்போது பரபரப்பான செய்தியாக வெளியானது. அதன் பிறகு வழக்கம் போல் சில நாட்களில் ஊடகங்களும், மக்களும் மறந்து போக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு இயந்திரம் ஏனோ அதனை கண்டும் காணாதது போல் இருந்ததற்கு காரணம் சிறுபான்மையினர் நடத்தும் இல்லத்தில் கை வைத்தால் விளைவுகள் ஏற்படும் என அஞ்சியதாலா? இல்லை கையூட்டு பெற்று கொண்டு கடமையாற்ற மறந்து போனதாலா? இதில் எது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடுத்தது எனத் தெரியவில்லை.

 

தவறிழைத்த குற்றவாளிகள் சிறைகளில் மர்மமான முறையில் இறந்து போனால் மட்டும் “நீதி விசாரணை வேண்டும், சிபிஐ விசாரணை வேண்டும்” “இறந்தவர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க வேண்டும்”, அவர்களின் குடும்பத்திற்கு லட்சக்கணக்கில் பண உதவி செய்ய வேண்டும்” என்றெல்லாம் அரசிடம் கோரிக்கை முன்வைத்து அரசுக்கு எதிராக முழக்கமிடுகிற, ஆர்ப்பாட்டம் செய்கின்ற, எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் “இவ்விவகாரத்தில் எங்கே போனார்கள்?” என்றே தெரியவில்லை.

ஒருவேளை வயதான முதியவர்கள் தானே என்கிற இளக்காரமா? ஆதரவற்றோர்களுக்கு ஆதரவாக எவர் வரப் போகிறார்கள் என்கிற அகங்காரமா? அல்லது சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை மனதில் கொண்டா? அல்லது “மதத்தை மறைத்து தங்களின் பெயரில் முகமூடியை போர்த்தியிருக்கும் சுயநலத்தினாலா?”

இது எது அவர்களை பாலேஸ்வரம் செயிண்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக போராட தடுத்தது என தெரியவில்லை.

செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தில் கடந்த வாரம் ஆய்வு நடத்திய போது தனியார் தொலைக்காட்சி ஒன்று அந்த இல்லத்தின் நிர்வாகியிடம் நேர்காணல் செய்த போது பேசிய அவர் அதிகாரிகள் எதற்காக இருக்கிறார்கள்? அவர்கள் கடப்பாரை கொண்டு வந்து தோண்டி பார்க்கட்டும், இந்த இல்லத்தை முடிந்தால் அரசு எடுத்து நடத்தட்டும் என ஆணவத்தோடும், அப்படி இந்த இல்லத்தை அரசு எடுத்து நடத்த வந்தால் திண்டுக்கல் உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள எங்களது ஆதரவற்றோர் இல்லங்களை இழுத்து மூடுவோம் என மிரட்டும் தொனியில் பேசியதை எத்தனை பேர் பார்த்தனர் என தெரியவில்லை.

அதுமட்டுமன்றி கடந்த 2015ம் ஆண்டு புகார் எழுந்த போது அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திமுகவின் திரு. சுந்தர் அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சனை வந்த போதும், தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதோடு மட்டுமின்றி அவரது சொந்த ஊருக்கு மிக அருகிலேயே அந்த ஆதரவற்றோர் இல்லம் இருந்தும் அவர் நடவடிக்கை எடுக்க தவறியது அதே தனியார் தொலைக்காட்சியில் தொலைபேசி நேர்காணல் மூலம் உணர முடிந்தது.

தவறிழைப்பது சிறுபான்மையினரோ, பெரும்பான்மையினரோ மனிதம் மறந்து செயல்படுவது எவராக இருந்தாலும் மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றமாகும்.

மேலும் இதுவரை சுமார் 1500க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றோர்களின் உயிரை எடுத்து, அவர்கள் உடலை, உடல் உறுப்புகளை வைத்து பணம் பண்ண நினைத்து செயல்பட்ட பிணந்திண்ணிக் கழுகுகளும், அதிகார வர்க்கத்தினரும், அரசியல்வாதிகளும் என அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்கு தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தினையும் தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும், தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அனைத்து ஆதரவற்றோர் இல்லங்களையும் தீவிர ஆய்வுக்குட்படுத்துவதோடு அவற்றின் நடவடிக்கைகளை கழுகு பார்வை கொண்டு கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

மேலும் ஊடக நண்பர்களே இப்பிரச்சினை உங்களால் தான் உலகறிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு நாள் பரபரப்பு செய்தியாக மட்டுமே நீங்கள் முடித்து கொண்டது வருத்தத்தை தருகிறது.

நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து பல நாட்களாக விவாதம் நடத்தும் நீங்கள் இவ்விவகாரத்தில் கண்டும் காணாதது போல கடந்து சென்றதை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

“ஊசி நுழைய முடியாத இடத்தில் கூட ஊடகத்தினரால் நுழைய முடியும்” என்பதையும், “மாற்றத்தை உருவாக்கும் மாபெரும் சக்தி ஊடகம்” என்பதையும் நன்கறிவோம். எனவே செயிண்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்று வரும் மோசடிகள் குறித்து விரிவான விவாதம் நடத்துங்கள்.
ஆதரவற்றோருக்கு இழைக்கப்படும் அநீதிகளை கலைந்து, பணத்திற்காக பிணந்திண்ணிக் கழுகுகளாக உலா வரும் கயவர்களை சட்டத்திற்கு அடையாளம் காட்டுங்கள் என அனைத்து ஊடகங்களையும், ஊடக நண்பர்களையும் அன்போடு கேட்டு கொள்கிறோம் … என்று சு.ஆ. பொன்னுசாமி கூறியுள்ளார்.

ஆனாலும்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe