சென்னை:
சென்னையில் 15 பேரின் பூணூல் அறுக்கப்பட்டதும் கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்கள். இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் டாக்டர் ராமதாஸ்.
இன்று லெனின், நாளை ஈ.வே.ரா., என்று சிலை இடிப்பு அரசியல் குறித்து கருத்து தெரிவித்த ஹெச்.ராஜாவின் கருத்தை கண்டிப்பதாகக் கூறி, அதற்கு பதிலாக, இன்று மயிலாப்பூர், திருவல்லிக்கேணியில், தபெதிக.,வினர் 8 பேர் கொலை வெறியுடன் தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் சுற்றி, கண்ணில் பட்ட அப்பாவி பிராமணர்களின் பூணூலை அறுத்துள்ளனர்.
இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவு…
சென்னையில் 15 பேரின் பூணூல் அறுக்கப்பட்டதும் கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்கள். இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
— Dr S RAMADOSS (@drramadoss) March 7, 2018