
சென்னை: 4 நாட்களுக்கு நடைபெறுகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 19 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்துவது என அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வியாழக் கிழமை இன்று தாக்கல் செய்யப் பட்ட தமிழக பட்ஜெட் மீதான கூட்டத் தொடர், மார்ச் 19ஆம் தேதி இரங்கல் தீர்மானத்துடன் துவங்க உள்ளது.
வரும் மார்ச் 22ஆம் தேதி, தான் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க உள்ளார். அன்றைய தினம் கேள்வி நேரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.



