1503389550 1500833972 1498559365 1487738097 mkstalin - 2026காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து எம்பிக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூறினார். ஆனால் அதற்கு அதிமுக மறுத்துவிட்டது. இந்த நிலையில் நான்கே நான்கு எம்பி மட்டும் வைத்துள்ள திமுக, அதிலும் இரண்டு எம்பிக்கள் பதவி காலாவதியாகும் நிலையில் அனைத்து எம்பிக்களையும் ராஜினாமா செய்ய சொல்வது கேலிக்குரியது என்றும் விமர்சிக்கப்பட்டது

இந்த நிலையில் 89 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள திமுக, தற்போது காவிரி பிரச்சனைக்காக எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தயார் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 89 எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது. அனைத்து எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தால் வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நப்பாசையில் அவர் சொல்வதாக தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, அவசரப்பட்டு ராஜினாமா செய்துவிட்டால் மீண்டும் அந்த 89 எம்.எல்.ஏக்களையாவது பெற முடியுமா? என்று யோசித்து கொள்ளுங்கள் என்று நெட்டிசன் ஒருவர் கிண்டலடித்துள்ளார். ஸ்டாலின் என்ன சொன்னாலும் கலாய்ப்பதற்கு என்றே இணையதளத்தில் ஒரு கூட்டம் இருப்பதால் திமுகவினர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending