சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கியது. இதில் காவிரி குறித்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி நதிநீர் பங்கீட்டுக்குழு அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்தில் கருப்புச் சட்டையுடன் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் பழனிசாமி. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு, அவைத்தலைவர் தனபால் விடுத்த வேண்டுகோளின் படி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் தீர்மானத்தை ஆதரித்தனர்.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு திமுக.,வும் முழு ஆதரவு தெரிவித்தது. இந்தத் தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசினார்.