சென்னை: அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்தப் பகுதியாக மாறியது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்தப் பகுதியாக மாறி தற்போது லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தொடர்ந்து நிலவி வருகிறது.
இதைஅடுத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.