
சமீபத்தில் நடந்த கொடூரங்களில் மாபெரும் கொடுமை ஒன்று நெல்லை மாவட்டத்தில் நடந்திருக்கின்றது
ஆனால் பாலேஸ்வரம், குரங்கணி தீ என பிசியாக இருந்த தமிழகமும் அதன் ஊடகங்களும் இக்கொடுமையினை மறந்தன அல்லது சக்திவாய்ந்த திருச்சபையின் நகர்வில் சில அரசியலில் அதை மறைத்தன.
ஆம், நெல்லை மாவட்டம் பணகுடியில் ஒரு கிறிஸ்தவ பள்ளி இருக்கின்றது, அங்கே ஒரு அயோக்கிய ஆசிரியன் (அந்தோனிசாமி) இருந்திருக்கின்றான். சம்பளம் வாங்குவது, பாடம் நடத்துவது இது போல அங்கு சிறுமிகளையும் சீரழித்திருக்கின்றான் இது அவன் அன்றாட பணியாயிருந்திருக்கின்றது
அதனை போனில் வேறு எடுத்து ரசித்திருக்கின்றான்
இது பன்னெடுங்காலமாக நடந்து அவன் போன் பழுதாகி சர்வீஸில் கொடுத்தபொழுது சிக்கி இருக்கின்றான், ஆனால் போன் சர்வீஸ் செய்தவன் திருட்டுபயலே ஜீவனாக இவனை மிரட்டி பணம் பெற்றிருக்கின்றானே தவிர அப்பிஞ்சுகளை பற்றி நினைத்தானில்லை! இது நடந்தது 2016ல்.
இந்நிலையில் இந்த ஆசிரியிர் அரசு பணி பெற்றுவிட்டு எங்கெல்லாமோ சென்று மறுபடியும் அதே பணகுடிக்கு வந்துவிட்டார். முன்பு சிறுபான்மை பள்ளியில் ஒப்பந்த ஆசிரியர், இப்பொழுது அரசு வேலை!
அவன் தன் லீலைகளை இன்னும் வேகமாக தொடர்ந்திருக்கின்றான். அரசு சம்பளம் என்றால் எனக்கொரு பங்கு கொடுக்க வேண்டும் என அந்த செல்போன் கடைகாரன் மிரட்ட, சண்டை பெரிதாக இந்த மாபெரும் கொடுமை வெளிவந்திருக்கின்றது
காண சகிக்காத படங்கள், ஒரு மனநோயாளியினை தவிர யாருக்கும் வராத கொடூர ரசனைகள் என பார்த்தவர்கள் அதிர்ந்திருக்கின்றார்கள்
அனைத்தும் 13 வயதிற்கும் குறைவான மாணவி பிஞ்சுகள். அவைகளை மிக கொடூரமாக கசக்கி எறிந்திருக்கின்றான் அந்த படுபாவி.
இது கொடுமை என்றால் இதன்பின் நடந்ததுதான் மாபெரும் கொடுமை
அந்த செல்போன் கடைகாரன் கட்ட பஞசாயத்து கோஷ்டியும் இந்த ஆசிரியரின் சண்டை காவல்துறைவரை சென்றது, பள்ளியின் தாளாள பாதிரி வரவழைக்கப் பட்டிருக்கின்றார்.
இப்பொழுது காவல் நிலையத்தில் இருப்பது மாணவிகளுக்கு எதிராக நடந்த கொடுமை அல்ல, ஆசிரிய பணியில் இருந்து ஒருவன் செய்த கொடூர சித்திரவதைகள் அல்ல.
மாறாக பள்ளியின் கவுரவம், நற்பெயர் ரோமன் கத்தோலிக்க சபை என்பது மாபெரும் அரசபீடம் அதிகார பீடம் அல்லவா? அதனால் மாணவிகள் எதிர்காலம், பள்ளியின் நற்பெயர் கருதி அந்த ஆசிரியர் நீரே இல்லா குளங்களில் பெண்கள் நீந்தி குளித்தபொழுது, வறண்ட கால்வாயில் குளித்தபொழுது படமெடுத்தார் என மூடிவிட்டார்கள்
அவனுக்கு ஒரு தண்டனையுமில்லை. ஆக உச்சபட்ச தண்டனை என்ன தெரியுமா? கொஞ்ச நாள் சஸ்பென்சன் எனும் தற்காலிக நீக்கம்!
இதில் சிக்கல் இல்லாமல் இல்லை. இது வழக்கானால் நிச்சயம் ஆதாரம் வேண்டும், ஆதாரம் வேண்டும் பட்சத்தில் அந்த பிஞ்சுகள் வாக்குமூலம் கொடுக்க வேண்டும்!
எந்த தாயும் தகப்பனும் அதற்கு சம்பதிப்பார்கள்?
இந்த புள்ளியில்தான் பள்ளி தன் நலனை காக்க பெற்றோருக்கு போதிக்கின்றது, வெளியில் தெரிந்தால் அவமானம் அதனால் அப்படியே அமுக்கிவிடலாம்.
ஆனால் எப்படி விடமுடியும்? அந்த சிறுமிகள் மனதளவில் பாதிக்கபட்டிருப்பார்கள், வீட்டில் சொல்லமுடியாமல் ஆசிரியரை மீறமுடியாமல் அவர்கள் மனம் குழம்பி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள், அவர்களுக்கு முதலில் நல்ல மனநல சிகிச்சை வேண்டும்
அடுத்து சட்டம்
அக்குழந்தைகளை ஏன் வாக்குமூலம் வாங்க வேண்டும், வீடியோ போட்டோ ஆதாரம் கிடைத்திருக்கின்றது, இந்த மானிட ஓநாயை 4 மிதி மிதித்தால் உண்மையினை ஒப்புகொள்ள போகின்றான், அத்தோடு பிடித்து உள்ளே போட்டால் முடிந்தது விஷயம்
அதையும் மீறி அந்த அபலை பிஞ்சுகளின் ஆதாரம் வேண்டுமென்றால் ரகசிய வாக்குமூலம் வாங்கலாம்…
நினைத்தாலே நெஞ்சு பதறும், ரத்தம் கொதிக்கும், மனதில் மாபெரும் வலியும் கூடவே கண்ணீரும் வரும் விஷயமிது.
ஆனால் பணகுடி பகுதி அமைதியாக இருக்கின்றது ஏன்?
அதுதான் சிறுபான்மையினர் எனும் பெயரில் இருக்கும் மாபெரும் ஆயுதம், ஏதும் சொன்னால் மற்றவர்கள் புகார் கொடுத்தால் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி என்பதால் மற்ற மதத்தவர் பொய் புகார் கொடுக்கின்றார்கள் என்பார்கள்
சரி அரசியல்வாதிகள் வருவார்களா என்றால் ராதாபுரம் தொகுதியின் திமுக அப்பாவு ஆகட்டும் இன்றிருக்கும் இன்ப துரை ஆகட்டும் இருவரும் கிறிஸ்தவர்கள்.
ஏதும் நடவடிக்கை எடுத்தால் கிறிஸ்தவ வாக்கு போய்விடுமே என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கின்றது.
காரணம் ராதாபுரம் தொகுதியில் கத்தோலிக்க குருக்கள் அவர்கள் சொற்படி கேட்கும் மக்களின் வாக்குவங்கி வலுவானது.
சாதி என்பது அதற்கு அடுத்து தயங்கும் விஷயம்; இதனால் அவர்கள் மகா அமைதி!
இந்து அமைப்புக்கள் கேட்கலாம், ஆனால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களை குறிவைக்கின்றார்கள் எனும் பொய்யினை சொல்லி கலவரத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால் அவர்களும் அமைதி!
ஆக அந்த பிஞ்சுகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
எந்த டிவியும், எந்த பத்திரிகையும் இதனை சொல்லவில்லை, அல்லது சொல்ல விரும்பவில்லை!
தமிழக அரசியல் எனும் பத்திரிகை மட்டும் உண்மையினை எழுதியிருக்கின்றது, அது என்ன மாதிரி மிரட்டலை அதன் பின் கண்டிருக்குமோ தெரியாது!
இதோ நாமும் எழுதுகின்றோம், நிச்சயம் மிரட்டுவார்கள். மிரட்டலுக்கு பயந்தவன் நல்ல மனிதனாக இருக்க முடியாது.
இந்த விஷயத்தின் முழு உண்மையினையும் சொல்லும் கடப்பாடு நெல்லை மாவட்ட காவல்துறைக்கு இருக்கின்றது!
அது சிறுபான்மை கல்வி நிறுவனமோ சிறு பயிறு கல்வி நிறுவனமோ பிரச்சினை இல்லை, ஆனால் அதற்கான சம்பளம் மக்கள் பணத்தில் இருந்து செல்கின்றது
அந்த அயோக்கிய ஆசிரியன் அந்தோணிசாமி மாநில கல்வித் துறையால் சம்பளம் பெறுகின்றான், கல்விதுறை அமைச்சரான செங்கோட்டையன் அவருக்கு மேல் இருக்கும் முதலமைச்சர் பழனிச்சாமியும் இதில் வருவார்கள்
இந்த பள்ளி பாதிரி மீதும், திருச்சபை மீதும் நம்பிக்கை இல்லை நிச்சயம் அவர்கள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்.
கல்விதுறை அமைச்சரும், மாநில முதலமைச்சரும் இந்த மாபெரும் கொடுமைக்கு என்னபதில் சொல்லப் போகின்றார்கள்?
காவல்துறை உண்மையினை ஏன் சொல்லாமல் இருக்க வேண்டும்?
நாம் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டாயிற்று!
பொதுவாக பத்திரிகைகளின் கடமை உண்மையினை மக்களிடம் சொல்வது, அவ்வளவுதான் அவை செய்ய முடியும்!
எந்த பத்திரிகையும் ஊடகமும் சொல்லாத விஷயத்தை சமூக தளத்தில், நாமும் சொல்லிவிட்டோம்!
அப்பகுதியில் கிறிஸ்தவ குருக்களின் ஆதிக்கமும் அவர்களுக்கு இருக்கும் ஆதரவும் எந்த செய்தியினையும் அவர்களால் மறைக்க முடியும், அதே நேரம் எவ்வளவு பெரிய போராட்டத்தையும் அவர்களால் நடத்தவும் முடியும் என்பதை முழுக்க அறிந்தவர்கள் நாம்!
நிச்சயம் அவர்கள் தங்கள் பள்ளியின் நற்பெயருக்காக அப்பிஞ்சுகளுக்கு நியாயம் கிடைப்பதை விரும்பமாட்டார்கள்
ஆனால் பைபிளின் வசனம் இருக்கின்றது, இயேசு பிரானின் மிக கடுமையான எச்சரிக்கை இருக்கின்றது
“சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு இடைஞ்சல் செய்கின்றவனுக்கு அய்யோ கேடு, அவன் கழுத்தில் எந்திர கல்லை கட்டி கடலில் தள்ளுவது நலம்”
இது சிறுவயது குழந்தைகளை துன்புறுத்துவோருக்காக இயேசு சபித்து சொன்னது
இவர்கள் பள்ளியின் பெயருக்காக , கவுரவத்திற்காக அந்த பரமன் இயேசுவின் வார்த்தைகளையே மீறுகின்றார்கள்!
நிச்சயம் இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல, கிறிஸ்தவர்கள் என சொல்ல இவர்களுக்கு தகுதியும் அல்ல!
இச்செய்தியினை காண பொறுப்பவன் மனிதனாய் இருக்க முடியாது. தேவையற்ற வாய்ப்பில்லா விஷயங்களை பெரிதாக்கியவர்கள், மாபெரும் கொடுமை நடந்திருக்கும் இந்த பள்ளி விஷயத்தில் ஏன் அமைதி என்பதுதான் புரியவில்லை
பைபிளில் இயேசு இரு இடங்களில் கண்ணீர் விட்டார், இப்பொழுது இக்கொடுமை மூலம் மூன்றாம் முறை கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார்
பாதிக்கபட்ட அந்த பிஞ்சுகளுக்காக, அவைகள் அறியாபருவத்தில் பட்ட அந்த மகா அவஸ்தைகளுக்காக நாமும் அழுதுகொண்டிருக்கின்றோம்.. சிறுபான்மையினர் என்ற போர்வையில் இந்நரிகள் தப்பிவிட கூடாது. அரசு தன் கடமையினை செய்யட்டும், கல்வி அமைச்சர் களமிறங்கட்டும்!
கொஞ்சமேனும் மானிட நேயமும், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பாளர்களும் இருந்தால் அவர்கள் கவனிக்கட்டும். நாம் சொல்ல வந்ததை கண்ணீருடன் சமூகத்திற்கு சொல்லியாயிற்று!
நல்ல சமூகன் உண்மைக்காக எந்த சூழலிலும் போராட வேண்டும். இல்லாவிட்டால் அவன் இந்தியனாக இருக்க முடியாது. இந்த அபலை பிஞ்சுகளுக்காக, அவற்றின் ஊமை அழுகுரலுக்காக எதனையும் சுமக்கலாம்.
இந்த தமிழகத்தில் கொஞ்சமேனும் நியாயமும் , தர்மமும் வாழ்கின்றது என்றால், கொஞ்சமேனும் மனசாட்சி எல்லோருக்கும் இருக்கின்றது என்றால் அக்குழந்தைகளுக்கு நீதி கிடைக்கட்டும்!
அந்த ஊமைகளின் அழுகுரலுக்காக, வெளி சொல்லமுடியா சிக்கலில் மனதால் வெடித்து அழும் அந்த பெற்றோருக்காக தமிழக அரசு ஏதாவது செய்தே தீரவேண்டும்!
நம் வீட்டு குழந்தைகள் என்றால் விட்டுவிடுவோமா? நம் வீடு என்ன? நம் அண்டை வீட்டு குழந்தைக்கு நடந்தாலே ரத்தம் கொதிக்காதா?
தமிழக அரசும் , அதிகார துறைகளும் இறங்கி வந்து நியாயம் கொடுக்குமளவும் இந்த படுபாதக செயலை எல்லோர் பார்வைக்கும் கொண்டு சென்று, பெரும் ஆதரவு குரல் கொடுக்கும் கடமையும், கட்டுப்பாடும் நம் எல்லோருகும் இருக்கின்றது, அதனை செய்வோம்
அது அக்குழந்தைகளின் மன, உடல் காயத்திற்கும், பெற்றோரின் மனதிற்கும் பெரும் ஆறுதலாக அமையட்டும். இச்சமூகம் தங்களை கைவிடவில்லை எனும் பெரும் நிம்மதியாக அமையட்டும்!
இச்செய்தியினை படித்த பின் இரவெல்லாம் தூக்கமில்லை, கண்ணீர் துளிதுளியாக வந்தது, இப்பொழுது வெடித்து வருகின்றது!
அய்யா எடப்பாடியாரே… சிறுபான்மை வோட்டுக்காக இந்த படுபாதகத்தை விட்டுவிடாதீர்கள். நீங்கள் அனுதினமும் வணங்கும் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா இம்மாதிரி விஷயங்களில் எப்படி எல்லாம் சீறியிருப்பார் என்பது உங்களுக்கு தெரியாதா?
இதனை நீங்கள் கண்டும் காணாமல் சென்றால்தான் சிறுபான்மை வோட்டு இழப்பீர்களே தவிர, நியாயமான நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் சிறுபான்மையினர் வோட்டு உங்களுக்கே, அதில் சந்தேகமே இல்லை!
பெண்களை பொத்தி வளர்க்கும் சமூகம் இது, பெண் குழந்தைகளை உயிரினும் மேலாக பாதுகாக்கும் தமிழ் சமுதாயம் இது.
அவன் மீதான ஆசிரிய அடையாளத்தை ரத்து செய்துவிட்டு, இனி எப்பள்ளியிலும் அவன் வேலை செய்யமுடியாதபடி தடை செய்துவிட்டு உரிய தண்டனை கொடுங்கள்.
அதிகாரம் கையிலிருக்கும் பொழுது நியாயமான நடவடிக்கை எடுத்தால் வரலாறு வாழ்த்தும், இல்லையேல் பழிக்கும்!



