
சென்னை: மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ்க்கு மயிலை தொகுதி மக்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.
அண்மைக் காலத்தில் இந்து மத விரோத செயல்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், தி.க., உள்ளிட்ட கழக குடும்ப அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவு படுத்தும் நோக்கிலேயே அரசியல் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்களின் பூணூல் அறுப்பு, குடுமி கத்திரிப்பு, கோயில்களில் அவமரியாதை செய்வது என்று இயங்கும் இவர்கள், அண்மையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் சிலரின் பூணூலை அறுத்து கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
மற்ற அமைப்புகளுக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உறுப்பினர்கள் பலர் இருப்பதால், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான பார்ப்பனர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க அமைப்பின் சார்பிலான உறுப்பினர்கள் எவரும் இல்லை. இந்நிலையில், அதிமுக., சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தொகுதியில் அதிகமுள்ள பார்ப்பன சமுதாயத்துக்காக தொகுதி எம்.எல்.ஏ., நட்ராஜ் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்விகளை எழுப்புகின்றனர்.
அந்தக் கேள்விகள் இதோ…
மயிலாபூர் சட்டமன்ற உறுப்பினர் திரு நடராஜன் அவர்களுக்கு,
ஐயா,
பெரு மதிற்பிற்கும், மரியாதைக்கும் உரிய தாங்கள் ஓர் நேர்மையானவர், துணிச்சலானவர், ஆற்றல் மிக்கவர் என்பதாலும் தாங்கள் முன்னாள் காவல் துறை அதிகாரி, இந்நாள் மயிலை MLA என்பதாலும் தங்களிடம் சில கேள்விகள்??
1. மயிலை தொகுதியில் பெருவாரியான வாக்குகள் பிராமணர்களுடையது!! ஜாதி அடிப்படை இல்லையேனும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு தாங்கள் செய்தது என்ன??
2. மயிலையில் பன்றிக்கு பூணூல் போடுவதாக ஆர்ப்பாட்டம் செய்த போது என்ன செய்தீர்கள்??
3. 15 பிராமணர் பூணூலை அறுத்துள்ளனர்; அதற்காக சட்டமன்றத்தில் என்ன கேள்வி எழுப்பினீர்கள்?
4. 2 பிராமணர் குடுமியறுக்கும் போது சட்டமன்றத்தில் என்ன கேள்வி எழுப்பினீர்கள்?
5. குறிப்பிட்டு மயிலையில் குறிவைத்து பிராமணர் தாக்கப்படுவதை ஏன் தாங்கள் கண்டிப்பதில்லை??
சட்டமன்றத்தில் குரல் கொடுக்கத்தானே தாங்கள் மன்ற உறுப்பினராக தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டீர்கள். இதற்காக தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? – என்று கேள்வி எழுப்புகின்றனர்!



