
சென்னை: நகைக்கடைகளுக்கு இது போதாத நேரம். பல பெரிய நகைக்கடைகளும் கூட இப்போது பொருளாதாரக் குற்றத்தில் சிக்கியிருக்கின்றன. சென்னையில் மிகவும் பிரபலமாக காட்டிக் கொண்ட நாதெள்ளா ஜூவல்லர்ஸ் நகைக்கடை மீது அதன் வாடிக்கையாளர்கள் 3,000 பேர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
நகைச் சீட்டுக்காக ரூ.33 கோடிக்கும் மேல் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக நாதெள்ளா ஜூவல்லர்ஸ் நகைக்கடை மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே, நாதெள்ளா ஜூவல்லர்ஸ் ரூ.250 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களும் புகார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.



