ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னர் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் பார்த்து திரைக்கு வர குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். ஷங்கர் போன்ற இயக்குனர்கள் இரண்டு வருடம் மூன்று வருடம் கூட படம் எடுத்து கொண்டே இருப்பார்கள்
இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கி வெறும் 51 மணி 2 நிமிட நேரத்தில் படப்பிடிப்பு ,மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து திரையிடப்பட்டும் உள்ளது. இது ஒரு கின்னஸ் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை மலையாள இயக்குனர் வினேஷ் மணி இயக்கிய ‘விஸ்வாகுரு’ என்ற படம் புரிந்துள்ளது.
இதற்கு முன்னர் 71 மணி நேரம் 19 நிமிடங்களில் தான் ஒரு திரைப்படம் முடிக்கப்பட்டதாக கின்னஸ் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை இலங்கை திரைப்படம் ஒன்று புரிந்திருந்தது



