நம்பெருமாள் ஜீயபுரம் சென்ற காணொளி – வருடம் ஒருமுறை செல்லும் இந்த பயணத்தின் போது ஸ்ரீரங்கம் மேலூர் அருகில் இருக்கும் விருச்சி மண்டபம் சென்று வழிநடை உபயம் கண்டு செல்வது வழக்கம் ..
1193 ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் உதவியுடன் ஸ்ரீரங்கம் கோவில் மாமனிதர் “கூரநாராயண ஜீயர்” காவேரியின் பாதையை ..மாற்றி அமைந்தார் …
மேலூர் என்கிற ஊர் அப்போது இல்லை .. காவேரி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக பாய்ந்து தற்கால காந்தி ரோடு மற்றும் திருவானைக்கா கோவில் தெற்கு மதில் சுவரை ஒட்டி சென்று கொண்டு இருந்ததை மாற்றி அமைத்த போது ..
இந்த மண்டபம் பற்றியும் அதன் அருகே இருக்கும் அரங்கனின் புனித தீர்த்தங்களில் ஒன்றான “புன்னாக தீர்த்தம் ” பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
விஜயராகவன் கிருஷ்ணன்



