திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விவேகானந்தரின் 152வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியில் மோடி தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளோம். மக்களை நம்பி மட்டுமே நாங்கள் தேர்தலில் நிற்கிறோம் என்று கூறினார்.
ஸ்ரீரங்கம் தேர்தலில் பா.ஜனதா வெற்றி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari