தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் தமிழகம், கேரளம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நியமித்து கட்சியின் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இதுதவிர மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்படுள்ளார்
இதேபோல கேரள மாநிலத்தின் பொறுப்பாளராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நாடா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம், கேரளம் தவிர அஸ்ஸாம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரேதசம் ஆகிய இடங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.



