விருதுநகரில் வைவா என்கிற நலச்சங்க அமைப்பு உள்ளது இதில் தமிழகம் முழுவதும் VLE க்கள் எனப்படும் கிராமப்புற நிலை தொழிலில் முனைவோர் பெரும்பாலோனோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர், விருதுநகரில் மட்டும் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் உள்ளனர் இவர்கள் ரேஷன்கார்டு கார்டு திருத்தம் ,அச்சிடுதல் துவங்கி பத்திரப்பதிவு வரை அனைத்து விதமான இணையம் சார்ந்த பணிகளை செய்துவருகின்றனர் இவர்கள் நாளை 3.4.2018 அன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த விருகின்றனர் இதுகுறித்து வைவா நிர்வாகிகள் கூறுகையில் கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே இந்நிலையில் தமிழக மக்களின் நலனில் எங்கள் வைவா அமைப்பும் பங்கெடுக்கும் விதமாக காவிரி மேலாண்மை உடனே அமைக்கக் கோரி ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தவிருக்கிறோம் ,எங்களின் கடையடைப்பு இந்த விஞ்ஞான வளர்ச்சி காலத்தில் எங்களை அன்றாடம் ஏதோவொரு இணைய சேவைக்கு நாடிவரும் பொதுமக்களுக்கு பதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும் இது ஒட்டுமொத்த தமிழகம் சார்ந்த பிரச்சனை என்பதால் விருதுநகர் மாவட்ட மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நலகும்படி கேட்டுகொள்கிறோம் என்றனர்
காவிரி மேலாண்மை வாரியம் கோரி விருதுநகரில் வைவா நலச்சங்கம் கடையடைப்பு போராட்டம்
Popular Categories



