காவிரிக்காக அதிமுக., வினர் நடத்திய ‘உண்ணும்’விரதம் போராட்டம் இது. வேலூரில் காவிரிக்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் உண்ணும் விரதம் இருக்கும் அதிமுகவினர், மோர், சமோசா நொறுக்குத் தீனியுடன் லஞ்ச் ப்ரேக் விடப்பட்ட போது எடுத்த படம் வைரலாகி வருகிறது.
நடனத்துடன் அதிமுக உண்ணாவிரதம் களைகட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. உண்ணாவிரதப் போராட்டத்தை வேர்க்கடலை, மோர், சமோசா என நொறுக்குத் தீனியுடன் செமையாக அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த உண்ணாவிரப் போராட்டத்தில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி, ஆட்டம் கூத்து என்று கட்சி விழா மேடை போல, எதற்கும் பஞ்சமில்லாமல் போனதால் தொண்டர்கள் உற்சாகமாகக் காணப்படுகின்றனர். உணர்ச்சி மிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




