
திருச்சி: திருச்சியில் கமல்ஹாசன் மாநாடு நடைபெற உள்ள நிலையில் திருச்சியில் இன்று முதல் 18ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி காவல் ஆணையர் இதனை அறிவித்துள்ளார்.
இருப்பினும், திருச்சியில் நடைபெறும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பொது கூட்டத்திற்கு தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இன்று முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆனால் திருச்சியில் நாளை கமல் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னரே அனுமதி பெற்றதால் கமல் பொதுக்கூட்டத்துக்கு தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



