
சென்னை: காவிரி உரிமை மீட்பு விஷயத்தில், அஞ்சல் அட்டைகளில் மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.
சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், காவிரி உரிமை மீட்புப் பயணம் முக்கொம்பில் இருந்து முதல் குழுவும், 9-ம் தேதி அரியலூரில் இருந்து 2-வது குழுவும் பயணம் மேற்கொள்ளும் என்றார்.
காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இறுதியில் ஆளுநரை சந்திக்க உள்ளோம் என்று கூறிய ஸ்டாலின், காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம் என்று கூறினார்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்பதால்தான், அவரை கருப்புக் கொடியுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.



