
கதவே இல்லாத கோவிலில் சிறுமியை எப்படி 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும்? என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கதவே இல்லாத கோவிலில் எப்படி ஒரு பெண்ணை 10 நாட்கள் அடைத்து வைத்திருக்க முடியும் என்று ஜம்மு காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்யப் பட்டு கொலையுண்டது குறித்து, பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம், மன்னிக்க முடியாத குற்றம். இதுதொடர்பில் அரசு நிச்சயம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.



