சென்னை: திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால், இப்போது #இடுப்புகிள்ளிதிமுக மீண்டும் ஒரு ட்ரெண்ட் செட்டராகிவிட்டது.
இடுப்பு கிள்ளி திமுக., என்று டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கி ஒரு ரவுண்ட் வந்த திமுக., எதிர்ப்பாளர்கள், இப்போது மீண்டும் திமுக., குறித்து அதே ஹாஷ் டாக்கை போட்டு, அடுத்த ரவுண்ட் வந்திருக்கின்றனர் டிவிட்டரில்!
அண்மையில் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக நடைபெற்ற போராட்டங்களில், திமுக., பெண் நிர்வாகி ஒருவரின் இடுப்பை திமுக., பொறுப்பாளர் ஒருவர் கிள்ளினார் என்று அந்தப் பெண் புகார் கூறினார்.
அது ஊடகங்களில் பெரிய அளவில் எதிரொலித்தும், அது குறித்து திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதையும் கண்டுகொள்ளவில்லை. அந்தப் பெண்ணும், கூண்டோடு பெண்கள் அனைவரும் திமுக.வில் இருந்து விலகுவோம் என்று மிரட்டிப் பார்த்தார். ஆனால், ஸ்டாலின் அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. திமுக., பெண் தொண்டர்களுக்கு தனது ஆதரவு உண்டு என்றும் காட்டிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. இருப்பினும் அந்தப் போராட்டத்தின் போது, தனி நபராய் நின்று சாலையில் பஸ்ஸை மறித்து போராடிய பெண்மணியை அழைத்து ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
ஆனால், நேற்று ஒரு பெண் ஊடகவியலாளர், ஆளுநருக்கு எதிராக ஒரு புகாரை தனது சொந்த டிவிட்டர் பதிவில் வெளியிட்டதும், அதை அரசியலாக்கி, அந்தப் பெண்ணுக்கு தனது ஆதரவு உண்டு என்று வலியக் கூறினார். தன் கட்சிப் பெண் தொண்டரின் உள்ளக் குமுறலைத் தீர்க்க மனம் இல்லாத ஸ்டாலின், பெண் ஊடகவியலாளருக்கு ஆதரவளிப்பது போல், அரசியல் செய்தார். இதனால் கடுப்பான இணையவாசிகள், முன்னர் ட்ரெண்ட் ஆக்கிய இடுப்புகிள்ளிதிமுக என்பதை மீண்டும் போட்டுள்ளார்கள்.
அதில் ஒருவர், பாத்திமா பாபு காலத்தில் மட்டும் இணையம் பாப்புலராக இருந்திருந்தால், கதையே வேறு.., என்று கூறியுள்ளார்.
இடுப்பு கிள்ளி திமுக., .டிவிட்டர் ட்ரெண்ட்..
Tweets about இடுப்புகிள்ளிதிமுக
பெண் செய்தியாளருக்கு என் முழு ஆதரவு – #ஸ்டாலின்
அதுதான் ஊரே நாரிச்சே#இடுப்புகிள்ளிதிமுக#தூ தூ pic.twitter.com/siYCJeK3to— ⚔இந்துத்துவம்⚔ (@VVR_KrishnaN) April 18, 2018




