தரம் தாழ்ந்த சொற்களால் சுயரூபத்தைக் காட்டிய திமுக! ஹெச்.ராஜாவுக்கு பதில் சொன்ன ஆர்.எஸ்.பாரதி!

Published:

rsbharathi - 2026

திமுக.,வும் அநாகரீகங்களும் பிரிக்க முடியாதவை என்பதை மெய்ப்பித்து, தங்கள் சுயரூபத்தைக் காட்டியுள்ளார் திமுக., எம்.பி., ஆர்.எஸ். பாரதி.

ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பதிவு தரம் தாழ்ந்தது என்று விமர்சனம் செய்து வரும் அரசியல்வாதிகள் பலரும் அதை விடத் தரம் தாழ்ந்த பதிவை இட்டுள்ள திமுக., எம்.பி. ஆர்.எஸ். பாரதிக்கு என்ன சொல்வார்களோ?! எதுவும் சொல்ல மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம். காரணம் அதை ஆமோதிப்பவர்கள் அவர்கள்!

அண்மையில் அரசியலுக்கு வந்த அற்பனே புரிந்து கொள் என்று ஹெச்.ராஜாவுக்கு பதில் சொல்லியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. எச்.ராஜாவே தலைவர் கலைஞரைப் பற்றியோ அவர் குடும்பத்தைப் பற்றியோ பேசுவதற்கு எந்த யோக்கியதையும் இல்லை. என் தலைவர் கலைஞர் சட்டமன்றத்தில் ஆண்மையோடு என் மகள் கனிமொழி என்று சட்டமன்ற குறிப்பில் பதிவு செய்ய வைத்தவர் … என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கு மணம் உண்டு என்ற பரம்பரையில் வந்த திராவிட இயக்கத்தவர்கள், தங்களுக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும், அவர்களை சாதி ரீதியாக வசை பாடுவர். அல்லது அவர்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி காது கொண்டு கேட்க முடியாத அளவுக்கு கொச்சைச் சொற்களால் பேசுவர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

ஆளுநர் குறித்த விவகாரம் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், ஆளுநரிடம் மரியாதைக் குறைவாக கேள்விகள் எழுப்பப் படுவது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் இது குறித்த தனது பதிவில்,

தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.

 

– என்று குறிப்பிட்டிருந்தார். இதில் எங்குமே அந்தத் தலைவர் யார் என்று அவர் பெயர் சொல்லவில்லை. கள்ளக் குழந்தை யாரென்றும் சொல்லவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கிய தலைவரிடம் போய் கேளுங்கள் என்று சொன்னாலும், அந்தத் தலைவர் யார் என்று எந்த ஊடகத்தாரும் கேட்கவில்லை. இத்தனை ‘க்ளூ’ கொடுத்து புரியாத புதிர் போட்டுள்ள ஹெச்.ராஜா, கொலையுண்டு மாண்டுபோன சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா ஆகியோரின் பெயர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். இவர்களை எல்லாம் கொலை செய்தவர்களின் கொடூரம் தங்கள் மனக்கண்ணில் தோன்றியதுமே, இது போல் அந்தத் தலைவரிடம் கேள்விகளைக் கேட்க அச்சப்படுவார்கள் ஊடகத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இத்தனை க்ளூக்களுக்கும் விடை தெரியாத ஊடகத்தினர் உடனே போய் அந்தத் தலைவரிடம் போய் நிற்கவில்லை. ஆனால், இவற்றை எல்லாம் ஆமோதிப்பது போல், திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, அந்த கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை கனிமொழிதான் என்று வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். கள்ளக் குழந்தையை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியவர் கருணாநிதியே என்று வெளிப் படுத்தியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.

ஹெச்.ராஜாவுக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு, அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு இது…

 

Related articles

Recent articles

spot_img