சென்னை: அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் அமெரிக்க செல்ல திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் குடியேற்றம் அல்லாத விசா சார்ந்த பணிச்சுமை கொண்டிருப்பதாகவும் தற்போதைய நிலவரப்படி அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்தால் நேர்காணலுக்காக 30 நாட்களுக்கு மேல் காத்திருக்க நேரிடலாம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.




