சென்னை: இன்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பதிவு ஒன்று. அதில், பொத்தாம் பொதுவாக எவர் பெயரையும் குறிப்பிடாமல், அந்த ஒரு தலைவரிடம் கேள்வி கேட்பார்களா என்று ஊடகத்தினருக்கு கேள்வி கேட்டிருந்தார் ஹெச்.ராஜா.
ஆளுநர் குறித்த விவகாரம் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், ஆளுநரிடம் மரியாதைக் குறைவாக கேள்விகள் எழுப்பப் படுவது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் இது குறித்த தனது பதிவில்,
தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே. – என்று கேட்டிருந்தார்.
அவரது டிவிட்டர் பதிவுக்கு மிக மோசமான வார்த்தைகளால் திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்திருந்தார். இந்நிலையில், பாஜக.,வின் தேசியத் தலைவர் ஹெச்.ராஜாவின் பதிவுக்கு அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில், பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில்,
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.. – என்று குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது…..
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 18, 2018




