
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 29ம் தேதி மெரினாவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேல்முருகன் உள்ளிட்டோர், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி முதல் மெரினா உழைப்பாளர் சிலை முன்பாக தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக கூறினர்.
இதனிடையே, மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. கடற்கரையில் 30 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தொடர்ந்த வழக்கில் காவல்துறை இவ்வாறு பதிலளித்துள்ளது. இந்நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.



