மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம்: ஒரு நாள் மட்டும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Madras High Court in Chennai - 2026

சென்னை: மெரினாவில் ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த பின்னர், அது வன்முறையில் முடிந்ததால் சென்னை மெரினா கடற்கரை, போராட்டம் நடத்தத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டது. போராட்ட பதட்டம் நிலவும் போதெல்லாம், மெரினாவில் போலீஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்படும். தடையை மீறி யாராவது போராட்டம் நடத்தினால், அவர்களை போலீஸார் கைதுசெய்து வந்தனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மோடியும் மத்திய அரசும் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரம் இருக்க அனுமதி கேட்டு, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க இயலாது, அது கொள்கை ரீதியான முடிவு என்று போலீஸார் கூறினர். மேலும், மெரினாவை அடுத்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட சில பகுதிகளில் போராட்டம் நடத்த அரசு ஒதுக்கியிருப்பதாகவும், அங்கே போராட்டம் நடத்திக் கொள்ள அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ALSO READ:  'அருந்தமிழ் 50' நூல் வெளியீடு

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி நீர் தமிழகத்துக்கு வருவது என்பதை விட, மெரினாவில் போராட்டம் மற்றும் மோடிக்கு எதிரான பிரசாரம் என்பதில் மட்டுமே குறியாக இருக்கும் அய்யாக்கண்ணு, விடாப்பிடியாக மெரினாவில் தான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கூறினார்.

இந் நிலையில், மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதுவும், 90 நாட்களுக்கெல்லாம் அனுமதிக்க இயலாது என்று கூறி, ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனறும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories